பக்கங்கள்

செவ்வாய், ஜூலை 19, 2011

வலையில் கோப்புகளை சேமிக்க SKYDRIVE

            நண்பர்களே நான் என் நண்பர்களிடம் ஹாட் மெயிலில் உள்ள skydrive  என்ற வசதியை பற்றி கூறும்பொழுது நிறைய நண்பர்களுக்கு அது பற்றி தெரியவில்லை. இது போல உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு. ஹாட் மெயிலில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி வழங்கபட்டிருக்கும். இதன் அளவு 25 GB கொள்ளளவு. இது முற்றிலும் இலவசம். இந்த skydrive  இல் கடவு சொல் உள்ள பாதுகாக்கப்பட  Folder ஆகவும், மற்றும் Favorite , Music , Video  என்றும் சேமிக்கலாம். மேலும் இதில் ஷேர் போல்டேராகவும் சேமிக்கலாம். இதில் சேமிக்கப்பட்ட ஒரு ஒரு கோப்பிற்கும் தனிப்பட்ட வலை முகவரி கொடுக்கப் பட்டுள்ளது. ஷேர் போல்டேரில் சேமித்த கோப்புகளை இந்த வலை முகவரியுடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். பாதுகாக்கப்பட்ட கோப்புகளை கடவு சொல் இல்லாமல் பார்க்க முடியாது.
                     மேலும் இதில் Windows Live Sync என்னும் போல்டெர் ஷேரிங் வசதி ஓன்று உள்ளது. இது ஒரு கணணி மென்பொருள்  மற்றும் வலையுடன் இயங்கக் கூடிய ஒரு வசதி. உங்கள் கணணியிலும் மற்றும் கோப்புகளை பகிரவேண்டிய கணணியிலும் இந்த Windows Live mesh என்ற மென்பொருளை நிறுவ வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் கணனியில் உள்ள கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம்.  இதன் கொள்ளளவு 5 GB  .  இதில் 20000  கோப்புகளையும் 20  போல்டேர்களையும் சேமிக்கலாம்.

ஹாட் மெயிலில் உள்ள skydrive படம்  

திங்கள், ஜூலை 11, 2011

உபயோகமான சில குறுக்கு வழிகள்

எக்ஸ்செலுக்கு தேவையான

வோர்டுக்கு  தேவையான

விண்டோஸ் பொத்தானுக்கு  தேவையான

விண்டோஸ்க்கு  தேவையான


Outlook  இற்கு  தேவையான


அடிப்படையான








சனி, ஜூலை 02, 2011

nLite - Windows XP Deployment Tool

இப்பொழுதும் விண்டோஸ் XP அனேக பயனாளர்கள் உபயோகிக்கும் இயங்கு தளமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது சந்தைக்கு வரும் புதிய மடிக்கணணி மற்றும் நோட் புக் கணணிகளிலும் sata வன்தட்டுகள் உபயோகப் படுத்தப் படுகின்றன . இதற்கு இதன் வேகமும் ஒரு காரணம். sata வன்தட்டுகள் உள்ள இப்படிப்பட்ட கணனிகளில் விண்டோஸ் XP நிறுவும் போது வன்தட்டு இல்லை என்று காண்பிக்கும். இதற்கு காரணம் விண்டோஸ் XP யில் SATA வன்தட்டுக்கான டிரைவர் இணைக்கப்படவில்லை. கணனியில் ப்ளோப்பி டிரைவ் இருந்தால் SATA வன்தகடின் டிரைவரை தரவிறக்கி நிறுவலாம். ஆனால் இந்த கணனிகளில் ப்ளோப்பி டிரைவ் இருக்காது. இந்த குறையை சரி செய்ய இந்த nLite மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இதை தரவிறக்கி நிறுவிய பிறகு கீழ்கண்ட சாளரங்கள் வரும். முதலில் ஒரு அசல் விண்டோஸ் XP குறுந்தகடை டிரைவில் இட்டு பிறகு இறுதி தயாரிபிற்கான போல்டேரையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கி வைத்துள்ள SATA வன்தகடின் டிரைவரை மற்றும் சர்வீஸ் பேக் இணைத்துக்கொள்ளலாம். இறுதியில் ISO கோப்பாக உருவாகிக் கொள்ளலாம். பிறகு ISO கோப்பை Nero, PowerIso அல்லது Ultra ISO போன்ற மென்பொருளை உபயோகித்து குறுந்தகடாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி. மற்றும் வேறு சுட்டி