பக்கங்கள்

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திரம்னா என்ன - சுதந்திர தின சிந்தனை

                   நண்பர்கள் அனைவருக்கும் எனது இந்திய சுதந்திர தின வாழ்த்துகள். எப்பொழுதும் இந்த சுதந்திர தினத்தில் எனக்கு இரு நிகழ்வுகள் என் கண் முன் தோன்றும்.
                   முதலாவதாக நான் முதல் முதலில் கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் நுழைந்த பொது என் கண் முன் தென் பட்ட ஒரு வாசகம். "Freedom is not a license to destroy" அதாவது "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" . பல ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனதை விட்டு நீங்காத ஒரு வாசகம்.
                  இரண்டவதாக நான் முதல் முதலில் சவுதி அரேபியா வந்த போது என்னுடன் பனிபுரியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது (நண்பர்கள் அனைவரும் எனக்கு முன்பு பல ஆண்டுகளாக பனி புரிபவர்கள்) அவர்களிடம் விரைவில் இந்திய சுதந்திர தினம் வருகிறது அதன் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலாக " இங்கு இருக்கும் எவரிடம் தேசப் பற்று உள்ளது, நம் நாட்டில் எதாவது அசம்பாவிதம் நடை பெற்றாலோ, பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டாலோ இந்திய பண மதிப்பு குறையும் அப்போது இங்கிருந்து நாம் அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கு அதிக இந்தியப் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள்  அல்லது சுதந்திர தின விழா என்று காரணம் காட்டி கூடி கும்மி அடிப்பவர்கள் தானே அதிகம்" என்றார். இது வெளி நாட்டில் வசிக்கும் அனைவரையும் பற்றிய கருத்து அல்ல ஆனால் அநேகரை பற்றிய கருத்து. 

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

விண்டோஸ் 7 ஐ விருப்பப்பட்ட முறையில் வடிவமைக்கும் மென்பொருள் - RT Se7en Lite

                       நண்பர்களே முன்பு விண்டோஸ் XP  தனித்துவமாக வடிவமைக்கும் மென்பொருள் பற்றி எழுதிஇருந்தேன். இந்த மென்பொருள் அதை விட மேம்பட்டது ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளதிர்க்கானது. இந்த மென்பொருள் உதவியுடன் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் வால்பேப்பர்கள், ஐகோன்கள், தீம்கள், டிரைவர்கள், மொழி தொகுப்புகள், அப்டேட்கள் மற்றும் தேவையான மென்பொருள்கள் ஒன்றிணைத்து  அல்லது நீக்கி விண்டோஸ் 7  இயங்கு தளத்தை Bootable ISO வாகவோ DVD யாகவோ அல்லது USB யாகவோ  உருவாக்க முடியும். இதன் மூலம் விண்டோஸ் 7  32  பிட் மற்றும் 64  பிட் இயங்குதளங்களை உருவாக்க முடியும். மேலும் பல வசதிகளை உள்ளடக்கியது. 

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

உணர்வுகளை மதிப்போம்

                    என்னுடன் பனி புரியும்  அராபிய நண்பர் ஒருவர் சமீபத்தில் தன குடும்பத்துடன் பிரான்சிற்கு சுற்றுலா  சென்றிருந்தார். அவருடைய பயண அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  பொதுவாக சவுதி அரேபிய நண்பர்கள் தங்கள் மதத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவர்கள், மற்றும் ஆச்சாரமானவர்கள். இங்கு அரேபிய பெண்கள் தங்கள் முகங்களையும் உடம்பையும் கருப்பு அங்கியால் மூடியிருப்பார்கள். ( எந்த நாட்டு பெண்களும் சவுதி அரேபியா வந்தால் கண்டிப்பாக கருப்பு அங்கி அணிந்து தான் இருக்க வேண்டும்). இது போல உடை அணிந்து பிரான்சில் வெளியே செல்லும் போது  தங்களை இஸ்லாமியர்கள் என்று அறிந்தால் ஏதாவது தொந்தரவு வருமோ என்று அவருக்கு ஒரு பயம் இருந்ததாம். ( உலகம் முழுவதும் ஏதோ அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று மாயையை உருவாக்கி உள்ளார்கள் அல்லவா)
                    ஒருமுறை அவர் தன குடும்பத்துடன் தொடர் வண்டியில் செல்லும்போது அங்கு இருந்த சிற்றுண்டி சாலையில் அவருக்கு பிடித்தமான Mozzarella Sandwich வாங்கலாம் என்று சென்றாராம். சிற்றுண்டி சாலையில் இருந்த விற்பனையாளரிடம் ஆங்கிலம் தெரியுமா என்ற போது தெரியாது என்றிருக்கிறார்.  உடனே நம் நண்பர் அவரிடம் செய்கையில் இது வேண்டும் என்று கேட்டார். விற்பனையாளரோ இது வேண்டாம் என்று செய்கையில் காண்பித்திருக்கிறார். நண்பரோ ஏன் நமக்கு தர மாட்டேன் என்கிறார் என்று மீண்டும் இது இரண்டு வேண்டும் என்று செய்கையில் கேட்டார். உடனே அந்த விற்பனையாளர் நண்பரிடம் ஹராம், ஹராம் என்றிருக்கிறார். ஹராம் என்றால் அராபிய மொழியில் பாவம் என்று பொருள். அந்த சான்விச் பன்றி இறைச்சியால் செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவது  பாவம். அதனால் தான் அந்த விற்பனையாளர் அவரிடம் தரவில்லை. என் நண்பர் இதை கூறி அந்த விற்பனையாளரின் மற்ற மனிதர்களின் உணர்வை மதிக்கக்கூடிய செய்கையை மிகவும் பாராட்டினார். 
                       படிக்கும் காலத்தில் என்னுடன் படித்த ஒரு பிராமின நண்பரின் சாப்பாட்டு பாத்திரத்தில் முட்டையை வைத்து விளையாடி அவன் மத்திய உணவை கொட்டி  விட்டு பட்டினியாக இருந்ததை நினைத்து பார்த்தேன். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நண்பா நீ எங்கு இருக்குராயோ அன்று செய்த தவறுக்கு மன்னித்து விடு.
                      நம் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். அப்போது தான் மனிதநேயம் வளரும்.

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

காணாமல் போன கோப்புகளை சுலபமாக மீட்டெடுக்க

                     நண்பர்களே சமிபத்தில் என்  நண்பர்  ஒருவர் தன்னுடைய  USB ல்  இணைக்கக்குடிய  வெளிப்புற  வன் தகடு  (External USB Hard Disk) ஒன்று  வேலை  செய்யவில்லை  என்றும், அதில்  உள்ள  முக்கியமான  கோப்புகளை  மீட்டெடுக்க  முடியுமா  என்று  கேட்டார். மேலும்  சில  கடைகளில்   கோப்புகளை மீட்டெடுக்க  நிறைய  பணம்  கேட்பதாகவும்  கூறினர். உடனே  நானும்  பெரிய  தில்லாலங்கடி  போல  நானே  எடுத்து  தருகிறேன்  என்று  கூறி  அதை  வாங்கி  வந்துவிட்டேன். பிறகுதான்  தெரிந்தது  அது  அவ்வளவு  சுலபம்  அல்ல  என்று.