பக்கங்கள்

சனி, ஜூலை 02, 2011

nLite - Windows XP Deployment Tool

இப்பொழுதும் விண்டோஸ் XP அனேக பயனாளர்கள் உபயோகிக்கும் இயங்கு தளமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது சந்தைக்கு வரும் புதிய மடிக்கணணி மற்றும் நோட் புக் கணணிகளிலும் sata வன்தட்டுகள் உபயோகப் படுத்தப் படுகின்றன . இதற்கு இதன் வேகமும் ஒரு காரணம். sata வன்தட்டுகள் உள்ள இப்படிப்பட்ட கணனிகளில் விண்டோஸ் XP நிறுவும் போது வன்தட்டு இல்லை என்று காண்பிக்கும். இதற்கு காரணம் விண்டோஸ் XP யில் SATA வன்தட்டுக்கான டிரைவர் இணைக்கப்படவில்லை. கணனியில் ப்ளோப்பி டிரைவ் இருந்தால் SATA வன்தகடின் டிரைவரை தரவிறக்கி நிறுவலாம். ஆனால் இந்த கணனிகளில் ப்ளோப்பி டிரைவ் இருக்காது. இந்த குறையை சரி செய்ய இந்த nLite மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
இதை தரவிறக்கி நிறுவிய பிறகு கீழ்கண்ட சாளரங்கள் வரும். முதலில் ஒரு அசல் விண்டோஸ் XP குறுந்தகடை டிரைவில் இட்டு பிறகு இறுதி தயாரிபிற்கான போல்டேரையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கி வைத்துள்ள SATA வன்தகடின் டிரைவரை மற்றும் சர்வீஸ் பேக் இணைத்துக்கொள்ளலாம். இறுதியில் ISO கோப்பாக உருவாகிக் கொள்ளலாம். பிறகு ISO கோப்பை Nero, PowerIso அல்லது Ultra ISO போன்ற மென்பொருளை உபயோகித்து குறுந்தகடாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி. மற்றும் வேறு சுட்டி

1 கருத்து: