பக்கங்கள்

ஞாயிறு, நவம்பர் 06, 2011

விண்டோஸ் 7 USB இல் இருந்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

பொதுவாக இயங்கு தளங்களை கணனியில் நிறுவும் போது CD அல்லது DVD கொண்டு நிறுவுவோம். சில கணனிகளில் CD டிரைவ் இல்லாத போது USB பிளாஷ் டிரைவ் கொண்டு நிறுவ வேண்டி இருக்கும். அதற்காக BOOTABLE USB டிரைவ் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் இதற்க்கு தேவையான பொருள்களை தயார் செய்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்
  1. USB பிளாஷ் டிரைவ் குறைந்தபட்சம் 4 GB கொள்ளளவு.
  2. விண்டோஸ் 7 இயங்குதளத்தின் DVD . (ISO கோப்பாக வைத்துள்ளவர்கள் அதை POWER  ISO அல்லது ULTRA ISO மென்பொருள்களைக் கொண்டு பிரித்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள் )
  3. விண்டோஸ் 7 இயங்கு தளம் நிறுவப்பட்ட ஒரு கணணி. ( இதில் உபயோகப்படுத்தப்படும் DISKPART  என்ற கட்டளையானது விண்டோஸ் xp இயங்குதளத்தில் இல்லை ).
செயல் முறை

    • உங்கள் USB பிளாஷ் ட்ரைவை கணனியுடன் இணைத்துக்கொள்ளவும்.
    • Start menu இக்கு சென்று > All programs > Accessories,  Command Prompt பிறகு right click செய்து select Run as administrator  என்று இயக்கவும். இப்போது c:\windows\system32 காண்பிக்கும்.
    • DISKPART  என்று டைப் செய்யவும். இப்போது கீழே காண்பித்தது போல செய்திகள் வரும்.


    • LIST DISK என்று டைப் செய்யவும். பிறகு கீழே படத்தில் உள்ளது போல செய்தி வரும். இதில் DISK 1 என்பது எனது பிளாஷ் டிரைவ்.(அதன் கொள்ளளவை கொண்டு உறுதி செய்து கொள்ளலாம். 
    • SELECT DISK 1
    • CLEAN
    • CREATE PARTITION PRIMARY
    • SELECT PARTITION 1
    • ACTIVE
    • FORMAT FS=NTFS (போர்மட் செய்வதற்கு சில நேரம் எடுக்கும்)
    • ASSIGN
    • EXIT
             இப்பொழுது அடுத்த நிலைக்கு செல்வோம். உங்களிடம் உள்ள விண்டோஸ் 7 இயங்குதளத்தின் DVD ஐ CD ROM டிரைவில் இடவும். இதில் எனது CD ROM டிரைவின் பெயர் "E " என்றும், பிளாஷ் டிரைவின் பெயர் "G " என்றும் இருப்பதால் கட்டளைகள் பின் வருமாறு. ( உங்கள் டிரைவின் பெயருக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.)
      • Start menu இக்கு சென்று > All programs > Accessories,  Command Prompt பிறகு right click செய்து select Run as administrator  என்று இயக்கவும். இப்போது c:\windows\system32 காண்பிக்கும். 
      • E:
      • CD BOOT
      • BOOTSECT.EXE /NT60 G:
      •  பிறகு கீழே படத்தில் உள்ளது போல செய்தி வரும்.
                இனி MY COMPUTER சென்று விண்டோஸ் 7 இயங்குதளத்தின் DVD யில் உள்ள அனைத்தையும் copy செய்து பிளாஷ் டிரைவில் paste செய்துகொள்ளவும். அவ்வளவுதான் இப்போது உங்கள் USB பிளாஷ் டிரைவ் BOOTABLE ஆக மாறி விட்டது.
                இன்ஸ்டால் செய்ய பூட் பண்ணும் போது BOOT PRIORITY - USB என தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    1 கருத்து: