நம் நாட்டிற்கு அணு மின்நிலையங்கள் தேவையா?
- நம் தேசத்தில் மரபு சார்ந்த மின்னிலயங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் நம் தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.
- நீர் மின்நிலையங்களை அமைக்க தேவையான நீர் ஆதாரங்கள் இல்லை.(குடிக்கவே தண்ணி இல்லே).
- நம் பொருளாதார நிலைமையை எண்ணிப் பார்த்தால் குறைந்த செலவில் அதிக மின்சாரம் தயாரிக்க அணு மின் நிலையம் நல்ல வழி.
- நமது நாட்டில் அணுமின்நிலையங்கள் அமைக்க தேவையான எரிபொருள்களின் கையிருப்பு உள்ளது.
அணு ஆற்றல் ஒரு அறிமுகம்
அணுஉலைகளில் முக்கியமான நிகழ்வு அணுக்கரு பிளவு (Nuclear Fission)
ஆகும். அணுக்கரு பிளவினால் உருவாகும் அதீத வெப்பம்தான் அணுவுலையின் பிரதான
ஆற்றல். அணுக்கரு இணைவினாலும் (Nuclear Fusion) வெப்ப ஆற்றலை உருவாக்க
முடியும் என்றாலும் அது மிகவும் சிக்கலான செயலாதலால் அணுவுலைகளில் அணுகருப்பிளவு பிரதான செயல்பாடா க பயன்படுத்தப்படுகிறது. சூரியன் அணுக்கரு இணைவு ஆற்றலின் முக்கிய உதாரணமாக கொள்ளலாம். அணுக்கரு பிளவை சிறிது தெரிந்து கொள்ளலாம்.
அணுக்கரு பிளவு:
1911 ஆம் ஆண்டு நியுசிலாந்தை சேர்ந்த ஈர்நெஸ்ட்
ருதர்போர்ட் (Ernest Rutherford) என்கிற அணு இயற்பியல் விஞ்ஞானி அணுவின்
உருவ அமைப்பை முதன்முதலாக உருவாக்கினார். இதற்க்கு Rutherfort Model என
பெயரிட்டனர். பிறகு 1913 ஆம் ஆண்டு நெய்ல்ஸ் போஹ்ர் (Niels Bohr) என்பவர்
அணுவின் மேம்பட்ட உருவ அமைப்பை உருவாக்கினார், அதற்க்கு Bohr Model என
பெயரிட்டனர். பிறகு Henri Becqueral, Marie Curie, Pierre Curie போன்ற
விஞ்ஞானிகள் அணு அமைப்பு, அணுக்கரு உருமாற்றம் ( Transmutation) ,
கதிரியக்கம், கதிரியக்க தேய்மானம் (Radioactive Decay) போன்றவற்றை
ஆராய்ச்சி செய்தனர்.
1917 ஆம்
ஆண்டு ருதர்போர்ட்,
ஆல்பா துகள்களை
கொண்டு நைட்ரோஜன்
அணுவை ஆக்சிஜென்
அணுவாக உருமாற்றி
(Transmutation )காட்டினார்.
இதுதான் அணுக்கரு
வினை ஆராய்ச்சிக்கு
முன்னோட்டம் எனலாம்.
பிறகு 1932 ஆம்
ஆண்டு ருதர்போர்டின்
சகாக்கள் இருவர்
(John
Cockcroft and Ernest Walton ) புரோட்டான் துகளை செயற்கையாக முடுக்கிவிட்டு லித்தியம் 7 என்ற அணுவை பிளந்து இரு ஆல்பா துகள்களாக மாற்றினார்கள். இந்த நிகழ்வை அணுப்பிளவு என பெயரிட்டனர். அதே சமயத்தில் Mark
Oliphant என்பவர் இரு
துரிதப்படுத்தப்பட்ட டயுட்டிறியும் அணுக்கருவை
இணைத்து முதல்
அணுக்கரு இணைப்பை
( Fusion ) நிகழ்த்தி காட்டினார்.
1932 ஆம் ஆண்டு ஜேம்ஸ் சாட்விக் என்ற ஆங்கில விஞ்ஞானி நியுற்றானை கண்டுபித்தபின் என்றிக் பெர்மி என்ற விஞ்ஞானி தன சகாக்களுடன் 1934 ஆம் ஆண்டு ரோமில் யுரேனியம் அணுக்கருவை நியுற்றானைக் கொண்டு மோத செய்தார் அப்போது உருவான புதிய தனிமத்திற்கு ஹெஷ்பீறியும் என்று பெயரிட்டார். ஆனால் இந்த சோதனையை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை.
லீஸ் மெயட்நேர், இவர் ஒரு ஆஸ்திரிய யூதர் இவர் தன்னுடைய குடியுரிமையை இழந்து அகதியாக ஸ்வீடனில் தங்கி இருந்தார். இவர் தன் நண்பரான ஓட்டோ ராபர்ட் பெரீஸ் ( இவரும் அகதியாக இருந்தவர் ) என்பவரும் ஜேர்மனிய விஞ்ஞானிகளான ஓட்டோ ஹான் மற்றும் பிரிட்ஸ் ஷ்ற்றாச்மான் என்பவர்களுன் சேர்ந்து ஜனவரி 1939 ஆம் ஆண்டு சோதனை ரீதியாக அணுக்கரு பிளவை நிருபித்துகாட்டினார்கள். இதுதான் அங்கீகரிக்கப்பட்ட முதல் அணுக்கரு பிளவு ஆகும். இதற்காக 1944 ஆம் ஆண்டு ஓட்டோ ஹான் நோபல் பரிசு பெற்றார். இதில் சிலர் இந்த நோபல் பரிசு நியாயமாக லீஸ் மெயட்நேர்க்கு தான் வழங்கியிருக்க வேண்டும் என கூறுவதுண்டு.
மேலே உள்ள படத்தில் அணுக்கரு பிளவை விளக்கியுள்ளது. இதில் ஒரு நியுட்ரான் யுரேனியம் 235 அணுக்கருவில் மோதினால் யுரேனியம் 236 ஆக மாறும் இது ஒரு நிலையில்லாத அணுக்கருவாக உள்ளதால் உடைந்து கிரிப்டோன் 92 , பேரியம் 141 மற்றும் 3 நியுட்ரான்கள் என உருமாறியுள்ளது. இந்த நிலையில் அதிக வெப்ப ஆற்றல் உருவானது. அதன் அளவு 200 Mev ஆகும். இந்த அணுக்கருப்பிளவு தொடர்ச்சியாக நடைபெறுவது சங்கிலி தொடர் வினை ( Chain Reaction ) எனப்படும். இது கீழே விளக்கப்படம் உள்ளது.
இந்த சங்கிலிதொடர் வினைதான் அணு உலையில் நடைபெறுகிறது.
உங்கள் சிந்தனைக்கு:
மேரி கியூரி அம்மையார் தனது 66 ஆம் வயதில் இரத்தப் புற்றுநோயால் இறந்து போனார்.- இவர் இறப்பு கதிர்வீச்சினாலா ?
- அல்லது 66 வயதில் எப்படி இறந்தால் என்ன ?
தொடர்ச்சி அடுத்த பதிவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக