பக்கங்கள்

செவ்வாய், டிசம்பர் 13, 2011

ஹார்ட் டிஸ்க்களில் உள்ள அனைத்தையும் சுத்தமாக அழிக்க ஒரு மென்பொருள்


                 தற்போதுள்ள டேட்டா  ரெகவரி மென்பொருள்கள் மூலம் நம்முடைய  USB பிளாஷ் மெமரி,  பிளாபி டிஸ்க் மற்றும்  ஹார்ட் டிஸ்க்களில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியும் என்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதே சமயத்தில் நாம் விற்கும் பழைய கணணியிலோ, எந்த டிஷ்க்களிலோ உள்ள நமது தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை மற்றவர்கள் மீட்டெடுத்து தவறான வழிகளில் உபயோகிக்க வாய்ப்பு உள்ளது என்பது ஒரு சிக்கலான விஷயம். இதற்காக உள்ள மென்பொருள்களில் ஒன்றை இன்று பார்ப்போம்.

                   Active@ KillDisk இது ஒரு சிறிய அதேநேரத்தில் மிகவும் சிறந்த மென்பொருள்.  நீங்கள் fdisk, Format மற்றும் Delete  என்ற இயல்பான இயங்கு கட்டளையை பயன்படுத்தினால், நீக்கப்பட்ட கோப்புகளை (டேட்டா  ரெகவரி  அல்லது unformat கருவிகள் பயன்படுத்தி) உரிமையாளரின் விருப்பத்திற்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பு எப்போதும் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் USB பிளாஷ் மெமரி,  பிளாபி டிஸ்க்   மற்றும்  ஹார்ட் டிஸ்க்களில் உள்ள அனைத்தையும் சுத்தமாக அழிக்க முடியும். இந்த மென்பொருள் இலவசமாகவும், மேம்படுத்தப்பட்ட பணம் செலுத்தி பெறக்கூடியதாகவும் கிடைகிறது.
இதன் சில சிறப்பம்சங்கள்.
  1. நமது கணனியில் இணைக்கப்பட்ட அனைத்து  Partition, Hard Drive, USB disk மற்றும் Floppy Disk போன்றவற்றின் விவரங்களை காண்பிக்கும்.
  2. Hard Drive, USB disk மற்றும் Floppy Disk ஆகியவற்றில் உள்ள தகவல்களை திரும்ப, திரும்ப எழுதுதல் முறைப்படி (One Pass Zero) சுத்தமாக அழித்துவிடும்.
  3. மேலும் அதிக கொள்ளளவு உள்ள டிஸ்க்களை கூட கையாள முடியும்.
  4. அனைத்து பைல் போர்மாட்களையும் (FAT, FAT32, NTFS, etc) கையாள முடியும்.
  • Hard Disk இல் உள்ளவற்றை அழித்தல்
  • Hard Disk இல் உள்ளவற்றை அழிக்கும் போது அதில் உள்ள டேட்டாக்களை காண.

  • Hard Disk இல் உள்ளவற்றை அழிக்கும் போது அந்த அமர்வின் பதிவுகளை காண.

  • அழிக்கும் முறைக்கான பாதுகாப்பு தரங்கள்.

  • Hard Disk இல் உள்ளவற்றை அழிக்கும் முன் உறுதி செய்தல்.

  • அழித்தல் நடைபெறுகிறது.
 இந்த மென்பொருளின் வலை தளம். http://www.killdisk.com/  கா 
 மென்பொருளை தரவிறக்க  
         இந்த மென்பொருளை நான் உபயோகித்து பார்த்தேன். உபயோகமாக உள்ளது. நீங்களும் உபயோகித்துப் பாருங்கள்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக