எனது வேலைப் பளுவின் காரணமாக தாமதமாக ஆகிவிட்டது மன்னிக்கவும். ராஜஸ்த்தான் அணுஉலை நிர்மாணிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது. 1972 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் அணு ஆயுத சோதனைக்காக "அமைதிக்கான அணு ஆயுதம்" என்ற ஒரு திட்டத்தையும் அதற்கான ஒரு விஞ்ஞானிகள் குழுவையும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆரம்பித்தார்.
இந்த குழுவில் திரு. ராஜா ராமண்ணா, திரு. P.K. ஐயங்கார், திரு.R. சிதம்பரம், திரு.N.S. வெங்கடேசன் மற்றும் திரு.W.D. பத்வாரதன் ஆகியோர் திரு.ஹோமி N. சேதன்னா அவர்கள் மேற்பார்வையில் நியமிக்கப்பட்டனர். சோதனை நிகழ்த்தப்பட்ட இடத்திற்கு அப்போது Dr. அப்துல் கலாம் அவர்கள் DRDO ( Terminal Ballistic Research Laboratory) சார்பாக வருகை புரிந்தார். ஆனால் அவர் பங்களிப்பு என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த அணு ஆயுதம் 1.25 மீட்டர் விட்டமும், 1400 கிலோகிராம் எதையும் கொண்டது. இதற்கு 6 கிலோகிராம் புளுட்டோனியம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் CIRUS அணு உலையில் இருந்து பெறப்பட்டது. இதன் நியுட்ரான் ஊக்குவிப்பான் ( Neutron Inhibitor ) Polonium - Beryllium மை உபயோகித்தனர். இதற்கு ரகசிய குறிப்பு சொல்லாக " பூ" என பெயரிட்டனர். இந்த அணு ஆயூதம் அனைத்தும் ட்ரோம்பாயில் நிர்மாணிக்கப்பட்டு பிறகு போக்ரானுக்கு கொண்டு செல்லப்பட்டது. போக்ரான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தில் உள்ளது. அங்கே உள்ள ராணுவ சோதனை இடத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி நிகழ்த்தப்பட்டது. இந்த நாள் புத்தர் பிறந்தநாள் ஆதலால் இந்த சோதனைக்கு "புன்னகைக்கும் புத்தர் " என பெயரிட்டனர்.
இந்த சோதனைக்குப் பிறகு பல அரசியல் நிகழ்வுகள் நடந்தது. அமெரிக்காவும் கனடாவும் இந்தியாவிற்கு அணு சோதனை உதவிகள் நிறுத்தப்பட்டன. இதனால் அணு உலைகளுக்குத் தேவையான கருவிகள் வேறு வழியாக பெறப்பட்டது. மேலும் இந்திய அணு விஞ்ஞானிகள் ராஜஸ்தான் இரண்டாவது அணு உலையை இயக்கி எங்களாலும்
முடியும் என்று நிருபித்தார்கள். அதன் பின் இந்தியாவின் சொந்த
தொழில்நுட்பத்தில் உருவாகிய முதல் அணுவுலை என்ற பெருமை கல்பாக்கத்தில் உள்ள
சென்னை அணு மின்நிலையத்திற்கு உரியதானது. அதன் பிறகு தொடர்ச்சியாக நரோரா,
கக்ரப்பாரா மற்றும் கைகா என இந்திய தொழில் நுட்பத்தில் அணுமின் நிலையங்கள்
அமைக்கப்பட்டன.
அணு குண்டு சோதனைகள் நான்கு விதமாக நடத்தப்படுகின்றன.
அவை
- வளிமண்டல சோதனை
- தரைக்கு அடியில்
- வளிமண்டலத்திற்கு மேலே
- கடலுக்கு அடியில்
சோதிப்பார்கள். அடுத்ததாக ராக்கெட்டில் ஏற்றி வளிமண்டலத்திற்கு மேலே வெடிக்கச் செய்வார்கள். கடலுக்கு அடியில் கப்பலில் இருந்தோ நீர் முழ்கி கப்பல் மூலமாகவோ சோதிப்பார்கள்.
இதுபோல அணு ஆயுத சோதனைகளால் ப பாதிப்புகள் உண்டு. இதனால் அனுகதிர்வீச்சும் அணுகதி துகள்கள் சிதறவும் வாய்ப்பு உண்டு. அமேரிக்கா 1954 ஆம் ஆண்டு காஸ்டல் பிராவோ என்ற இடத்தில் புதுவிதமான ஹைட்ரோஜென் குண்டு சோதித்த பொது விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அதிக வீரியம் உள்ளதாக இருந்தது. அதனால் ஏற்ப்பட்ட கதிரியக்கம் அவர்கள் கணித்ததை விட அதிகமாக இருந்ததால் அதன் பாதிப்பு நூறு மைல்களுக்கும் அதிகமாக இருந்தது. அதன் கதிவீச்சை கீழே உள்ள படத்தில் காணலாம்.
நாடுகள்
|
நிகழ்த்திய அணு ஆயுத சோதனைகள்
|
அமேரிக்கா
|
1054
|
சோவியத் யூனியன்
|
715
|
பிரான்ஸ்
|
210
|
ஐக்கிய இராச்சியம்
|
45
|
சீனா
|
45
|
இந்தியா
|
6
|
பாகிஸ்த்தான்
|
6
|
வட கொரியா
|
2
|
1963 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி வளிமண்டல, கடலுக்கு அடியில், வளிமண்டலத்திற்கு மேலே சோதனைகள் தடை செய்யப்பட்டது ஆனால் தரைக்கடியில் சோதனை செய்ய அனுமதி தரப்பட்டது. பிறகு 1996 ஆம் ஆண்டு விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது வரை இது முழுவதுமாக கடைபிடிக்கப் படவில்லை.
அடுத்த பதிப்பில் கதிரியக்கத்தை பற்றி பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக