பக்கங்கள்

சனி, அக்டோபர் 29, 2011

சாம்சுங் கலாக்சி கைபேசியில் அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருள் இல்லையா - இதோ வழி

சாம்சுங் கலாக்சி கைபேசியில் அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருளுக்கு பதிலாக சாம்சுங் அன்டேரோயிட் மார்க்கெட் என்ற ஒரு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும். இந்த மென்பொருளை திறந்தால் அது அப்டேட் ஆகி இந்திரொஇட் (Indiroid ) என்ற மென்பொருள் நிறுவப்படும். இதனால் பொதுவாக அன்டேரோயிட் மார்க்கெட்டில் உள்ள மென்பொருள்களை நமது கைபேசியில் தரவிறக்க முயன்றால் கூகுளே கணக்கில் நுழையச் சொல்லும். பிறகு உங்கள் கைபேசி இந்த கணக்கில் இல்லை என்று பதிலளிக்கும். இதை சரி செய்ய
நான் முதலில் அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருளை வேறு இணையதளங்களில் இருந்து தரவிறக்கி கைபெசில் நிறுவிப் பார்த்தேன் ஆனால் அன்டேரோயிட் மார்கெட்டை திறந்தால் Forced to close என்று வந்து தானாகவே மூடிவிடும். அதற்க்கு பதிலாக அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருளை rar கோப்பாக தரவிறக்கி கைபேசியில் boot folder இல் வைத்து firmware flash செய்யலாம். அப்படி செய்தால் இரண்டு சிக்கல்கள் வரும்
        1. கைபேசியில்  உள்ள மொழிகள் செயல்படாமல் போய் விடும் ( Arabic Language Support )  
       2. கைபேசியின் நிறுவனம் தரும் உத்திரவாதம் (Guaranty) செல்லாமல்  போய் விடும்.

          இந்த சிக்கலை தீர்க்க மிக சுலபமான வழி ஓன்று உள்ளது. Eclair firmware உள்ள கைபேசிகளில் 
1. Menu-->settings-->Date and Time-->  போய்  'use 24-hour format' ஐ தேர்ந்தெடுக்கவும்.
2. கைபேசியின்  keypad இல்  *#272*XXXX#  என்று அடிக்கவும் ( 'XXXX' என்பது எதாவது நான்கு எண்கள். இப்பொழுது கைபேசியின் தற்போதைய நேரத்தை காண்பிக்கும் உதாரணமாக 2130 என்று வந்தால் *#272*2130# என்று அடிக்கவும். 
3. இப்போது ஒரு மெனு திறக்கும் அதில் "XSG" என்று தேர்ந்து எடுத்தவுடன் அன்டேரோயிட்  மார்க்கெட் நிறுவப்படும்.
4. பிறகு கைபேசி தானாகவே Hard Reset ஆகி  Reboot ஆகும்.

              அவ்வளவுதான் இனிமேல் தாரளமாக அன்டேரோயிட்  மார்க்கெட்டில் இருந்து எந்த மென்பொருளையும் தரவிறக்கலாம்.
              
                Froyo பயனாளர்களுக்கு இந்த முறை உதவாது.அவர்கள் 1.கைபேசியின்  keypad இல்  *#272*IMEI Number என்று அடிக்கவும். IMEI Number ஐ காண Menu-->settings-->About phone --> Phone Status--> க்கு போனால் காணலாம்.
2.இப்போது ஒரு மெனு திறக்கும் அதில் "XSG" என்று தேர்ந்து எடுத்தவுடன் அன்டேரோயிட்  மார்க்கெட் நிறுவப்படும்.
3.பிறகு கைபேசி தானாகவே Hard Reset ஆகி  Reboot ஆகும்.
       சந்தோசம் தானா முயற்சி செய்து பின்னுட்டம் தாருங்கள்.

3 கருத்துகள்:

  1. தகவல் பயன் படும் .தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ப்ரியா இருந்த நம்ம சைட்டுக்கு வாங்க !
    malaithural.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி நண்பரே. உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன். மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு