இந்த பதிவில் அணுமின் நிலையங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். அணுஉலைகளில் பலதரப்பட்டதொழில்நுட்ப்ப வடிவமைப்புகள் உள்ளது. முதலில் நமது முதல் வணிகரீதியிலான தாராப்பூர் அணு உலையைப் பற்றி
பார்போம்.
இந்த அணுவுலையானது அமெரிக்க நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அணுஉலை 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் நாள் தன் வணிகரீதியான உற்பத்தியை துவங்கியது. இந்த இரண்டு அணுவுலைகளும் தலா 160 MWe உற்பத்தித்திறன் கொண்டது. இந்த அணுவுலையானது கொதி நீர் அணுவுலையாகும் (Boiling water Reactor ). இந்த அணுஉலையின் மாதிரி விளக்கப்படம் கீழே.
இந்த அணுஉலையில் கனிமங்கள் நீக்கப்பட்ட நீரானது (Demineralized Water)
அணுஉலை குளிர்விப்பானாகவும் (Coolant) நியுட்ரான் மட்டுப்படுத்தியாகவும் ( Neutron Moderator ) செயல்படுகிறது. அணுஉலையின் நடுப்பகுதியில் உள்ள எரிபொருள்களில் (செறிவூட்டப்பட்ட யுரேனியம் ) இயற்கையாக நடக்கக்கூடிய அணுசிதைவினால் உருவாகக்கூடிய விரைவு நியுற்றான்கள் எரிபொருள் குழாய்களை சுற்றியுள்ள நீரில் மோதி மீண்டும் திரும்பி எரிபொருளையே அடையும். இங்கு பயன்படுத்தப்படும் சாதாரண நீரானது சில நியுற்றான்களை தனக்குள் கிரகித்துக்கொள்ளும், மீதியை திருப்பிவிடும். இதனால்தான் இந்த அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தில் அதிக அளவு யுரேனியம் 235 உள்ளது இது அதிக நியுற்றான்களை உருவாக்க வல்லது. நீரினால் திருப்பி அனுப்பப்பட்ட நியுற்றான்கள் மீண்டும் எரிபொருளை அடைந்து தொடர்ச்சியாக அணுப்பிளவை ஏற்படுத்தும். இதுதான் போன பாகத்தில் பார்த்த சங்கிலித் தொடர் வினை என்பது. இந்த சங்கிலித் தொடர் வினையால் உருவாகக்கூடிய வெப்பத்தினால் நீர் சூடாகி நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியானது டர்பைனை சுழற்றி அதனுடன் இணைக்கப்பட்ட ஜெனேராடரில் மின் உற்பத்தி செய்ய வைக்கிறது. பிறகு அந்த நீராவியானது கீழே உள்ள குளிர்விப்பானால் (Condenser) குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராகி அணு உலைக்கு அனுப்பப் படுகிறது.
அணுவுலையின் ஆற்றலை கட்டுப்படுத்தும் முறை:
இந்த அணுஉலையின் எரிபொருள் குழாய்களுக்கு ஊடே கட்டுப்பாட்டுக் கோல்கள் நிறுவப்பட்டிருக்கும். இந்த கோல்கள் எரிபொருளில் இருந்து வரும் நியுற்றான்களை கவர்ந்து கொள்ளும் அதனால் சங்கிலி தொடர் வினை மட்டுப்படும். இதன் மூலமாக அணுஉலையின் ஆற்றலை கட்டுப்படுத்த முடியும். இயற்கையாக சில உலோகங்கள் நியுற்றானை தனக்குள் கவர்ந்து கொள்ளும். உதாரணம் போறான், செனோன், டைட்டானியம், கட்மியம் போன்றவை. இவைகளை வேறு சில ஐசொடோப்புகளோடு சேர்த்து கட்டுப்பாட்டுக் கோல்களை உருவாக்குவார்கள்.
இந்த அணுஉலையின் சாதகங்கள்

- இந்த அணு உலையானது மற்ற அணு உலைகளை ஒப்பிடும்போது குறைவான அழுத்தம் கொண்டது.
- அணு உலையின் சுவர் அதிக கதிரியக்கம் அடையாததால் நாளடைவில் சேதம் அதிகம் அடையாது. மற்றும் பல.
- இந்த அணு உலையின் எரிபொருள் பயன்பாட்டு கணக்கெடுப்பு மிகவும் சிக்கல் நிறைந்தது. எனவே இதற்க்கு பயன்படும் கட்டுப்பாட்டு கருவிகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும்.
- இதற்க்கு மிகவும் பெரிய அணு உலை தேவைப்படும் அதனால் தயாரிப்பு செலவும் அதிகம்.
- நீராவியானது அணு உலையில் உருவாவதால் கதிர்வீச்சு டர்பைன் வரை பரவ வாய்ப்புள்ளது.
- பொதுவாக அணுஉலையின் ஆயுட்காலம் 30 ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வரைதான். இன்று 42 ஆண்டுகளை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த அணுவுலையின் பாதுகாப்பு எப்படியுள்ளது?
- 2011 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் புகுஷிமா அணுவுலை மேல் கூறிய BWR அணுவுலையாகும். மேலும் புகுஷிமா 1,2 மற்றும் 3 வது அணுஉலைகள் நமது தாராப்பூர் அணுவுலைக்குப் பின் கட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக