பக்கங்கள்

திங்கள், ஜூன் 27, 2011

இனைய இயங்குதளம் (Web OS)


தற்பொழுது கூகுள் நிறுவனம் புதிய மடிக் கணணியை இனைய இயங்குத்தளத்தை Google Chromium என்று அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்பொழுதும் சில இயங்குதளங்கள் உள்ளது. உதாரணமாக iCloud இது Apple நிறுவனத்தின் மடிக்கணணி, iPad மற்றும் கைபேசியிலும் இருந்து தொடர்புகொள்ள முடியும். ஆனால் நான் குறுப்பிட இருப்பது ஒரு இலவச இனைய இயங்கு தளம்.

இந்த இயங்கு தளத்தின் சிறப்பம்சங்கள்
  • இது எல்லாவிதமான இயங்குதளம் மற்றும் உலவிகளிலும் இருந்து பயன்படுத்த முடியும். உதாரனத்திற்க்கு Windows, Linux மற்றும் Mac இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும்.
  • மேலும் Android, Black Berry,iPhone, iPad, செம்பியன் மற்றும் Windows மொபைல்களிலும் இருந்து பயன் படுத்த முடியும்.
  • இதில் இலவச மின்னஞ்சல் மற்றும் 30 GB இலவச சேமிப்பு இடமும் தரப்பட்டுள்ளது.
  • இதில் போட்டோ எடிட் மற்றும் டாகுமென்ட் எடிட் பண்ணமுடியும்.
  • மற்றும் பல வசதிகள்.

நான் இதை உபயோகித்துபார்த்தேன் நன்றாக இருக்கிறது.

கணனியில் இருந்து தொடர்பு கொள்ள இங்கு

iPad ல் இருந்து த்தொடர்பு கொள்ள இங்கு

கைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள இங்கு

அருகில் இருபவர்களை நேசியுங்கள்

இது சமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தி

60 வயது பாட்டியை காதலித்து அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

தர்மபுரி:
60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் .

இப்பொழுது அனேக இளைஞர்களும் மேலும் சில பெரியவர்களும் தங்கள் நேரங்களை Facebook,Twitter மற்றும் அநேக அரட்டை அறைகளிலும் செலவிடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் விடுதியில் இருக்கும் தன் மகனுக்கு வந்திருக்கும் காய்ச்சலைப் பற்றி Facebook ல் பார்த்து தெரிந்துகொண்டார் என்று அவரே கூறினார். மேல் நாடுகளில் நேரமின்மையால் கற்பனையான வளர்ப்பு பிராணிகள் மற்றும் காதலிகள் என்று மென்பொருள்களும் விளையாட்டு பொருள்களும் வைத்திருகிறார்கள். அதுபோல ஒரு செயல்தான் இதுவும். நமக்கு நேரமில்லை என்று சொல்வது உண்மையல்ல, இது சோம்பலின் மறுபெயர். நம்முடைய வேலைநேரம் அதே 8 மணிநேரம்தான். மீதம்முள்ள நேரத்தை பொழுது போக்குவதற்கும் இணையத்திலும் செலவிடுகிறோமே ஒழிய அதை நம்முடன் இருக்கும் துணைகளுடனும், பெற்றோர்களுடனும் குழந்தைகளுடனும் செலவிட மறுக்கிறோம். எங்கோ தூரத்தில் இருக்கும் முகம் தெரியாத ஒருவருடன் செலவிடத் தயாராக இருக்கும் நாம் நம்முடனே கூட இருக்கும் நமக்காக இருக்கும் நம் உறவுகள் நேசிப்பதும் இல்லை மதிப்பதும் இல்லை. அதனால் தன் மேலே குருப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. நேசிப்போம் மனிதர்களாய் வாழ்வோம்.

வெள்ளி, ஜூன் 17, 2011

வின்க்- கணணி திரை கைப்பற்றும் மென் பொருள்

இது ஒரு ஸ்க்ரீன் காப்சுரிங் மென்பொருள், அதாவது கணனியின் திரையில் உள்ள பிரேம்களை சிறு சிறு புகைப்படங்களாக மாற்றி பின்பு அதை பிளாஷ் திரைப்படமாக உருவாக்க கூடிய சிறிய மென் பொருள். இதன் அளவு 3.19 எம்.பி. இந்த பிளாஷ் திரைபடங்கள் மென்பொருள்கள் கற்பிப்பதற்கும் மென்பொருள்கள் விளக்கப்படங்கள் தயாரிபதற்கும் உபயோகமாக இருக்கும்.
இது ஒரு இலவச மென்பொருள்
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களிலும் இயங்குமாறு பலவித வடிவங்களில் உள்ளது.
இதனுடன் ஒலி தகவல்களையும் இணைக்கலாம்.
இதனுடன் பலவகையான உள்ளீடுகளையும் இணைக்கலாம். இதன் தரவிறக்க சுட்டி


இதன் மூலம் தயாரித்த காணொளி