பக்கங்கள்

திங்கள், ஜூன் 27, 2011

அருகில் இருபவர்களை நேசியுங்கள்

இது சமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தி

60 வயது பாட்டியை காதலித்து அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

தர்மபுரி:
60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் .

இப்பொழுது அனேக இளைஞர்களும் மேலும் சில பெரியவர்களும் தங்கள் நேரங்களை Facebook,Twitter மற்றும் அநேக அரட்டை அறைகளிலும் செலவிடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் விடுதியில் இருக்கும் தன் மகனுக்கு வந்திருக்கும் காய்ச்சலைப் பற்றி Facebook ல் பார்த்து தெரிந்துகொண்டார் என்று அவரே கூறினார். மேல் நாடுகளில் நேரமின்மையால் கற்பனையான வளர்ப்பு பிராணிகள் மற்றும் காதலிகள் என்று மென்பொருள்களும் விளையாட்டு பொருள்களும் வைத்திருகிறார்கள். அதுபோல ஒரு செயல்தான் இதுவும். நமக்கு நேரமில்லை என்று சொல்வது உண்மையல்ல, இது சோம்பலின் மறுபெயர். நம்முடைய வேலைநேரம் அதே 8 மணிநேரம்தான். மீதம்முள்ள நேரத்தை பொழுது போக்குவதற்கும் இணையத்திலும் செலவிடுகிறோமே ஒழிய அதை நம்முடன் இருக்கும் துணைகளுடனும், பெற்றோர்களுடனும் குழந்தைகளுடனும் செலவிட மறுக்கிறோம். எங்கோ தூரத்தில் இருக்கும் முகம் தெரியாத ஒருவருடன் செலவிடத் தயாராக இருக்கும் நாம் நம்முடனே கூட இருக்கும் நமக்காக இருக்கும் நம் உறவுகள் நேசிப்பதும் இல்லை மதிப்பதும் இல்லை. அதனால் தன் மேலே குருப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. நேசிப்போம் மனிதர்களாய் வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக