இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து காலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேற்றல் முடித்து வெளியே செல்லும் போது சுங்க அதிகாரிகளிடத்தில் கை பெட்டியை சோதனை கருவிவழியாக அனுப்பினேன். ஒரு அதிகாரி பெட்டியில் தங்கம் இருக்கிறதா? என்றார்.
நானும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் என்னை ஏதோ தங்க கடத்தல் ஆசாமி போல் போய் 10 ஆம் எண் செயலரையில் உள்ள அதிகாரியை பாருங்கள் என்றார். நானும் அவரிடம் சென்றேன். பெட்டியை திறந்தது நகையும் அதன் பணம் செலுத்திய ரசீதையும் அவரிடம் காண்பித்தேன், அவர் அதை பார்த்து விட்டு 30 கிராம் நகை அதற்கு கிராமிற்கு 70 ரூபாய் வீதம் 2100 ரூபாய் மற்றும் மேல் வரியாக 1500 ரூபாயும் சேர்த்து 3600 ரூபாய் செலுத்துங்கள் என்றார். எனக்கு ஒரே திகைப்பாகி போய் விட்டது அதற்கு இரு காரணங்கள்
1. இதுவரை எத்தனையோ முறை கைப்பெட்டியில் எடுத்து சென்றும் யாரும் இது போல கேட்டதில்லை.2. இது எனக்காக எடுத்து செல்லவில்லை, மேலும் கொடுத்து அனுப்பிய நண்பர் மிகவும் குறைந்த வருமானத்தில் மூன்று வருடங்கள் ஊருக்கு செல்லாமல் சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய அந்த நகைக்கு சுங்க வரி கட்டினால் சவுதியில் வாங்கியதற்கு எந்த பலனும் இருக்காது.
எனவே அந்த அதிகாரியிடம், "நான் எத்தனையோ முறை கொண்டு வந்திருக்கிறேன் இது வரை நான் சுங்க வரி கட்டியதில்லை" என்றேன்.
உடனே அவர், "அப்படி என்றால் பல முறை நீங்கள் சுங்கவரி கட்டாமல் ஏமாற்றியுள்ளீர்கள்" என்றார்.
நான், " நான் ஒன்னும் மறைத்து கொண்டு வரவில்லை " என்றேன்
பிறகு அவரிடம் ஆபரண நகைகளுக்கு சுங்க வரி கிடையாது அதுவும் நான் கொண்டு வந்தது மிகவும் குறைவான அளவு என்று நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு அவர் உயர் அதிகாரியை கூப்பிட்டார்.அவர் வந்து எவ்வளவு கிராம் என்றார், 30 கிராம் என்றவுடன் சாதாரணமாக 10 கிராம்தான் வரி இல்லாமல் அனுமதிக்க முடியும். இது சிறிதுதான் கூடுதலாக இருப்பதால் நீங்கள் போகலாம் என்றார்.
ஆனால் அவர் அதற்கு பிறகு பேசிய வசனம்தான் என்னை சிறிது கோபப்படுத்தியது. " எல்லோரும் கூட்டமாக லஞ்சம், ஊழல் என்று எங்களை எதிர்த்து கூச்சல் போடுகிறீர்கள் ஆனால் நீங்கள் ஒழுங்காக இருக்கிறீர்களா?" என்றார்.
உடனே அவரிடம், "ஐயா, நான் உங்களிடம் நான் நகையை மறைக்கவில்லை, மேலும் இங்கு எங்களுக்கு எந்த விதமான வரைமுறைகளும் வழங்குவதில்லை, மேலும் உங்கள் செயல் முறைகளும் ஒவ்வொரு முறையும் மாறுபடுகிறது. உங்களிடம் வெளிப்படையான செயல் முறைகள் இல்லை. அண்ணா ஹசாரே மேல் உள்ள கோபத்தை எங்களிடம் காட்டுகிறீர்கள்' என்றேன்.
அவர், " அதிகம் பேசுகிறீர்கள் சீக்கிரம் போங்கள்" என்றார்.
இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அதிகாரிகளுக்கும் அண்ணா ஹசாரேயால் ஏற்பட்ட அரிப்பு. இதற்க்கு மருந்து என்ன?.
சேம் ப்ளட்டு!
பதிலளிநீக்குஅப்படியே வேர்டு வெரிபிகேசன் அகற்றவும்