பக்கங்கள்

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

அணுஉலைகள் - கதிரியக்கம் பாகம்-6

கதிரியக்கம் - எந்த ஒரு ஆற்றலூட்டப்பட்ட துகள்களோ அல்லது ஆற்றல் உள்ள அலைகளோ ஏதாவது ஊடகத்தினூடோ வெற்றிடத்தினுடோ ஊடுருவி செல்லும் நிகழ்வுக்கு கதிரியக்கம் எனப்படும்.

 
                 இதை புரியும்படியாக சொல்லவேண்டும் என்றால் அணுத்துகள்கள் அல்லது துணை அணுத்துகள்கள் ஏதாவது தூண்டுதலால் ஆற்றல் பெற்று வேகமாக ஒரு ஊடகத்தை ஊடுருவி செல்வதும், வெப்பக்கதிர்கள், ஒளிக்கதிர்கள், ஒலிக்கதிர்கள், X கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் ஒரு ஊடகத்தை ஊடுருவி செல்வதும் கதிரியக்கம் என சொல்லலாம்.
                  கதிரியக்கத்தை இரு பிரிவாகப்  பிரிக்கலாம். 
  1. மின்னுட்டப்பட்ட கதிரியக்கம் (Ionizing radiation)
  2. மின்னுட்டப்படாத கதிரியக்கம் (Non Ionizing Radiation)
Non Ionizing Radiation
  1. மின் காந்த அலைகள் (Electro Magnetic Waves)
  2. கண்ணுக்கு தெரியக்கூடிய ஒளிக்கதிர்கள் (Visible Lights)
  3. அகச்சிவப்புக் கதிர்கள் (Infrared Rays)
  4. புற ஊதாக் கதிர்கள் (Ultra violet Rays)
  5. நுண் அலைகள் (Micro waves)
  6. ரேடியோ அலைகள் (Radio Waves)
  7. வெப்பக் கதிர்கள் (Thermal Radiation)
ஆகியவைகள் இதில் அடங்கும்.
Ionizing Radiation
  1. ஆல்பா கதிர்கள் (Alpha Rays)
  2. பீடா கதிர்கள் (Beta Rays)
  3. காமா கதிர்கள் (Gamma Rays)
  4. நியுட்ரான் கதிர்கள் (Neutron rays)
  5. எக்ஸ் கதிர்கள் (X Rays)
ஆகியவைகள் இதில் அடங்கும்
                          பொதுவாக சொல்லவேண்டும் என்றால் இரு கதிரியக்கத்திலும் பாதிப்பு உண்டு. ஆனால் ஆற்றலில் Non Ionizing Radiation குறைவாக இருப்பதால் அதன் பாதிப்பும் குறைவாகவேதான் உள்ளது. Ionizing Radiation கதிரியக்கப் பொருள்கள், மற்றும் கதிரியக்க கருவிகள் முலமாக ஏற்படும். இந்த வகையான கதிர்கள் ஊடகத்தை ஊடுருவி செல்லும் பொது அந்த ஊடகத்தில் உள்ள அணுக்களை சிதைக்கும். அப்படி சிதைக்கப் பட்ட அணுக்களில் இருந்து எலேக்ட்ரோன்கள்  மின்நூட்டமுள்ள அயான்களாக வெளிப்படும்.  
  • ஆல்பா - இது ஒளியின் வேகத்தை விட 5 % அதிக வேகம் உடையது. இது செல்லும் வழியில் உள்ள அணுக்களை தாக்கி சிதைக்கும் ஆற்றல் கொண்டது. காற்றில் சிறிது தூரமே செல்லக்கூடிய திறன் கொண்டதாக இருந்தாலும் மெல்லிய காகிதத்தினால் தடுத்துவிடமுடியும்.
  • பீட்டா - பீட்டா மைனஸ் (β -) கதிரியக்கம் ஆற்றலுள்ள எலேக்ட்ரான்களையும், பீட்டா பிளஸ்  (β +) கதிரியக்கம் ஆற்றலுள்ள  பாசிட்ரான்களையும் கொண்டதாகும். இந்த கதிரியக்கம் ஆல்பா கதிரியக்கத்தை காட்டிலும் அதிக மின்னுட்டக்கூடிய ஆற்றல் படைத்தது. இந்த கதிரியக்கத்தை சில சென்டிமீட்டர் தடிமன் கொண்ட பிளாஸ்டிக்காலையோ சில மில்லிமீட்டர் தடிமன் கொண்ட உலோக தகட்டாலையோ தடுத்துவிடமுடியும்.
  • காமா - காமா கதிரியக்கமானது அதிக அலை வேகம் கொண்ட ஒளித்துகள்களை (Photons) கொண்டது. காமா கதிர்வீச்சானது சிதைவு அடையும் அனுக்கருவானது ஆல்பா, பீட்டா கதிர்களை வெளிப்படுத்திய பிறகு மீதம் உள்ள அதிகபட்ச  ஆற்றலை  வெளியேற்றுவதாகும். ஆல்பா, பீட்டா கதிர்கள் மின்நூட்டமும் எடையும் கொண்டது. ஆனால் காமா கதிர்கள் மின்நூட்டமும் எடையும் அற்றது.எனவே இது ஆல்பா, பீட்டா கதிர்களை போலல்லாமல் எந்த ஊடகத்தை ஊடுருவும் திறனும் அதிக தூரம் பயணிக்கும் திறனும் பெற்றது. இந்த கதிர்களை அதிக எடையும் அடர்த்தியும் கொண்ட உலோகங்களான காரீயம் கொண்டு ஓரளவுக்கு தடுக்கலாம்.
  • நியுட்ரான் -  இந்த கதிர்கள் கதிரியக்க பொருள்களில்  இருந்து தன்னிச்சையாகவோ அனுபிளவு, அனுஇணைவு போன்ற நிகழ்வுகளாலோ வெளிப்படும். இந்த கதிர்வீச்சை இந்த நியுட்ரான் துகள்களின் வேகத்தை கொண்டு வகை பிரிக்கலாம். இதில் குறைந்த வேகம் கொண்ட வெப்ப நியுட்ரான் மற்ற பொருள்களோடு மோதி அந்த பொருள்களை கதிரியக்க பொருள்களாக மாற்றும். ஆனால் அதிக வேகமும் ஆற்றலும் கொண்ட நியுட்ரான் மற்ற பொருள்களின் அணுக்கருவில் மோதி அணுப்பிளவை ஏற்படுத்தும். இந்த கதிர்வீச்சு அதிக ஊடுருவும் திறனும் அதிக தூரம் (சில ஆயிரம் மீட்டர்கள்) பயணிக்கும் திறனும் கொண்டது. இந்த கதிவீச்சை அதிக தடிமன் கொண்ட கான்க்ரீட் சுவர்களாலோ அதிக அகலம் கொண்ட நீர் தடுப்புகளாலோ தடுக்க முடியும்.
  • எக்ஸ் -  இது குறைந்த அலை தூரமும் அதிக ஆற்றலும் கொண்ட மின் காந்த ஒளித்துகள்கள் எனலாம். இது பெரும்பான்மையாக மருத்துவ துறையில் மட்டுமே பயன் படுத்தப் படுகின்றது.
 
 கதிரியக்க அளவு முறைகள்
                கதிரியக்க அளவு முறைகளை சுருக்கமாக பாப்போம்.
Roentgen : இது ஒரு இடத்தில் எவ்வளவு கதிரியக்கம் இருக்கிறது என்பதை அளவிடக்கூடிய அலகு. அதாவது காமா கதிரியக்கமானது ஒரு கன சென்டிமீட்டர் காற்றில் வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு ஆகும். இந்த அளவை  சுருக்கமாக "R" என்று குறிப்பிடுவார்கள்.
Rad: Radiation Absorbed Dose  எல்லா பொருள்களும் கதிரியக்கம் வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை ஒரே அளவில் கிரகித்துக் கொள்வதில்லை. எந்த ஒரு பொருளும் குறிப்பாக மனிதர்கள் எவ்வளவு கதிரியக்கத்தை கிரகித்து கொண்டுள்ளார்கள் என்பதை அளவிடும் அலகு. ஒரு Roentgen கதிரியக்கத்தால் பெற்றுக்கொண்ட கிரகித்துக்கொண்ட கதிரியக்க அளவு ஒரு RAD  ஆகும்.
Rem: Roentgen Equivalent Man இது பெற்றுக்கொண்ட கதிரியக்கத்தால் மனித உடலில் ஏற்படும் உயிரியல் பாதிப்பை அளவிடும் அலகு. ஒவ்வொரு வகையான கதிரியக்கத்திற்கும் ஒரு தரக் காரணி உண்டு. காமா, பீட்டா = 1 , ஆல்பா = 20 . 
 
பெற்றுக்கொண்ட கதிரியக்கம் - 1RAD கதிரியக்க வகை = காமா உயிரியல் பாதிப்பு = 1/1= 1Rem
 
பெற்றுக்கொண்ட கதிரியக்கம் - 1RAD கதிரியக்க வகை = ஆல்பா உயிரியல் பாதிப்பு = 1/20= 0.05 Rem
 
இப்பொழுது பன்னாட்டு தர அலகு (SI) ஒன்று பயன்படுத்தப்படுகிறது.

Radioactivity
Absorbed Dose
Dose Equivalent
Exposure
Common Units
curie (Ci)
rad
rem
roentgen (R)
SI Units
becquerel (Bq)
gray (Gy)
sievert (Sv)
coulomb/kilogram (C/kg)
 
அதன் படி அலகுகளின் சிறு ஒப்பீடு.
1 microcurie (µCi) = 37 kilobecquerel (kBq)
1 rad (rad) = 10 milligray (mGy)
1 rem (rem) = 10 millisievert (mSv)
1 coulomb/kg (C/kg) = 3876 roentgen (R)
 
கதிரியக்க பாதிப்புகளை அடுத்த பதிவில் காண்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக