பக்கங்கள்

திங்கள், பிப்ரவரி 20, 2012

பயர்பாக்ஸ் உலவிக்கான இரண்டு பயனுள்ள நீட்சிகள்

       இப்பொழுது அநேகரால் விரும்பப்படும் உலவிகளில் பயர்பாக்ஸ் முக்கியமானது. மேலும் இந்த உலவியில் நமக்குத் தேவையான பல நீட்சிகளை இணைத்துக் கொள்ளமுடியும். இந்த உலவிக்கான இரண்டு பயனுள்ள நீட்சிகள் இந்த பதிப்பில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவை
  1. Adblock-plus 
  2. Flash-video-downloader-youtube 


ADBLOCK-PLUS
        நாம் இணையத்தில் உலாவும் போது இணையப் பக்கங்களில் விளம்பரங்கள் தோன்றி நம்மை வெறுப்பேத்தும். இந்த நீட்சியானது நாம் இணையத்தில் உலாவும் போது இனைய பக்கத்தில் உள்ள விளம்பரங்களை மறைத்துவிடும்.
இந்த Adblock-plus நீட்சியை நிறுத்தி விட்டால் காணப்படும் இணையபக்கம் 
இந்த Adblock-plus நீட்சியை இயக்கினால் காணப்படும் இணையபக்கம்

FLASH VIDEO DOWNLOADER
         நாம் உலாவும் இணையப் பக்கங்களில் காணும் பிளாஷ் வீடியோக்களை, பிளாஷ் விளையாட்டுக்களை மற்றும் பிளாஷ் வாழ்த்துக்களை தரவிறக்க இந்த நீட்சி உபயோகமாயிருக்கும். மேலும் இதன் மூலம் யூ டியுபில் இருந்தும் வீடியோக்களை தரவிறக்கலாம்.
          மேலே உள்ள இணைய பக்கத்தில் பிளாஷ் இல்லை என்றால் இது போல தரவிறக்க குறியில் பெருக்கல் குறி இருக்கும்.
             மேலே உள்ள இணைய பக்கத்தில் பிளாஷ் இருந்தால் இது போல தரவிறக்க குறி இப்படி இருக்கும். இப்பொழுது இந்த சுட்டியை சொடுக்கினால் பக்கத்தில் உள்ள பிளாஷ் விடியோவோ விளையாட்டோ தரவிறக்கம் தொடங்கி விடும்.
        யூ டியுபில் விடியோவை தரவிறக்க இதுபோல விரும்பிய முறையில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக