இந்த இணையதளம் அறிவியல்,பொறியியல், வணிகவியல் மற்றும் பொதுவான பல கணக்கிடுதலுக்கான தளம் ஆகும். இதில் உள்ள பல கணக்கிடுதலை நான் பரிசோதிக்கவில்லை. ஆனால் பொறியியல் சம்பந்தமான சில விசயங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்; வெந்து தணிந்தது காடு;-தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? - மகாகவி சுப்ரமணிய பாரதி
சனி, டிசம்பர் 24, 2011
கணக்கிடுதலுக்கான ஒரு இணையத்தளம்
வியாழன், டிசம்பர் 22, 2011
அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 3
இந்த பதிவில் அணுமின் நிலையங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம். அணுஉலைகளில் பலதரப்பட்டதொழில்நுட்ப்ப வடிவமைப்புகள் உள்ளது. முதலில் நமது முதல் வணிகரீதியிலான தாராப்பூர் அணு உலையைப் பற்றி
பார்போம்.
திங்கள், டிசம்பர் 19, 2011
அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 2
நம் நாட்டிற்கு அணு மின்நிலையங்கள் தேவையா?
- நம் தேசத்தில் மரபு சார்ந்த மின்னிலயங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் நம் தேசத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.
அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 1
தற்போது நம் கூடங்குளம் மட்டுமல்ல ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் உக்ரைனிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் அணுஉலை எதிர்ப்பு. சிலர் அணுஉலைகளை ஆதரித்தும் சிலர் எதிர்த்து எழுதியும் பேசியும் வரும் இந்த வேளையில் என் சிற்றறிவிற்கு எட்டிய சில விசயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இந்த பதிவானது எனது தனிப்பட்ட கருத்துகள், இதில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. முடிந்தவரை அனைவருக்கும் புரியும்படி எழுதியுள்ளேன். இது யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல.
செவ்வாய், டிசம்பர் 13, 2011
ஹார்ட் டிஸ்க்களில் உள்ள அனைத்தையும் சுத்தமாக அழிக்க ஒரு மென்பொருள்
தற்போதுள்ள டேட்டா ரெகவரி மென்பொருள்கள் மூலம் நம்முடைய USB பிளாஷ் மெமரி, பிளாபி டிஸ்க் மற்றும் ஹார்ட் டிஸ்க்களில் அழிக்கப்பட்ட
தகவல்களை மீட்டெடுக்க முடியும் என்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதே
சமயத்தில் நாம் விற்கும் பழைய கணணியிலோ, எந்த டிஷ்க்களிலோ உள்ள நமது
தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களை மற்றவர்கள் மீட்டெடுத்து தவறான வழிகளில்
உபயோகிக்க வாய்ப்பு உள்ளது என்பது ஒரு சிக்கலான விஷயம். இதற்காக உள்ள
மென்பொருள்களில் ஒன்றை இன்று பார்ப்போம்.
ஞாயிறு, நவம்பர் 06, 2011
விண்டோஸ் 7 USB இல் இருந்து இன்ஸ்டால் செய்வது எப்படி?
பொதுவாக இயங்கு தளங்களை கணனியில் நிறுவும் போது CD அல்லது DVD கொண்டு
நிறுவுவோம். சில கணனிகளில் CD டிரைவ் இல்லாத போது USB பிளாஷ் டிரைவ் கொண்டு
நிறுவ வேண்டி இருக்கும். அதற்காக BOOTABLE USB டிரைவ் தயாரிப்பது எப்படி
என்று பார்ப்போம். முதலில் இதற்க்கு தேவையான பொருள்களை தயார் செய்து
கொள்வோம்.
சனி, அக்டோபர் 29, 2011
சாம்சுங் கலாக்சி கைபேசியில் அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருள் இல்லையா - இதோ வழி
சாம்சுங் கலாக்சி கைபேசியில் அன்டேரோயிட் மார்க்கெட் மென்பொருளுக்கு பதிலாக சாம்சுங் அன்டேரோயிட் மார்க்கெட் என்ற ஒரு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும். இந்த மென்பொருளை திறந்தால் அது அப்டேட் ஆகி இந்திரொஇட் (Indiroid ) என்ற மென்பொருள் நிறுவப்படும். இதனால் பொதுவாக அன்டேரோயிட் மார்க்கெட்டில் உள்ள மென்பொருள்களை நமது கைபேசியில் தரவிறக்க முயன்றால் கூகுளே கணக்கில் நுழையச் சொல்லும். பிறகு உங்கள் கைபேசி இந்த கணக்கில் இல்லை என்று பதிலளிக்கும். இதை சரி செய்ய
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
அண்ணா ஹசாரேயால் ஏற்பட்ட அரிப்பு
இரவெல்லாம் தூக்கத்தை தொலைத்து காலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேற்றல் முடித்து வெளியே செல்லும் போது சுங்க அதிகாரிகளிடத்தில் கை பெட்டியை சோதனை கருவிவழியாக அனுப்பினேன். ஒரு அதிகாரி பெட்டியில் தங்கம் இருக்கிறதா? என்றார்.
வெள்ளி, அக்டோபர் 21, 2011
டோரென்ட் பயனாளர்களுக்கு
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு இந்த பதிவு வருகிறது. இந்தியாவிற்கு விடுமுறையில் சென்று திரும்பிய பிறகு எனது அலுவலகத்தில் விட்டுப் போன வேலைகளை முடிப்பது என நேரமின்மை காரணமாக என்னால் எழுத முடியவில்லை. பொதுவாக டோரென்ட் பயனாளர்கள் தமக்குத் தேவையானவற்றை தேடுவதற்கு அனைத்து டோரென்ட் வலைகளிலும் தேடவேண்டி இருக்கிறது. இந்த தேடுதலை சுலபமாக்க இந்த மென்பொருள் உதவுகிறது.
திங்கள், ஆகஸ்ட் 15, 2011
சுதந்திரம்னா என்ன - சுதந்திர தின சிந்தனை
நண்பர்கள் அனைவருக்கும் எனது இந்திய சுதந்திர தின வாழ்த்துகள். எப்பொழுதும் இந்த சுதந்திர தினத்தில் எனக்கு இரு நிகழ்வுகள் என் கண் முன் தோன்றும்.
முதலாவதாக நான் முதல் முதலில் கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் நுழைந்த பொது என் கண் முன் தென் பட்ட ஒரு வாசகம். "Freedom is not a license to destroy" அதாவது "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" . பல ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனதை விட்டு நீங்காத ஒரு வாசகம்.
இரண்டவதாக நான் முதல் முதலில் சவுதி அரேபியா வந்த போது என்னுடன் பனிபுரியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது (நண்பர்கள் அனைவரும் எனக்கு முன்பு பல ஆண்டுகளாக பனி புரிபவர்கள்) அவர்களிடம் விரைவில் இந்திய சுதந்திர தினம் வருகிறது அதன் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலாக " இங்கு இருக்கும் எவரிடம் தேசப் பற்று உள்ளது, நம் நாட்டில் எதாவது அசம்பாவிதம் நடை பெற்றாலோ, பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டாலோ இந்திய பண மதிப்பு குறையும் அப்போது இங்கிருந்து நாம் அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கு அதிக இந்தியப் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள் அல்லது சுதந்திர தின விழா என்று காரணம் காட்டி கூடி கும்மி அடிப்பவர்கள் தானே அதிகம்" என்றார். இது வெளி நாட்டில் வசிக்கும் அனைவரையும் பற்றிய கருத்து அல்ல ஆனால் அநேகரை பற்றிய கருத்து.

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011
விண்டோஸ் 7 ஐ விருப்பப்பட்ட முறையில் வடிவமைக்கும் மென்பொருள் - RT Se7en Lite
நண்பர்களே முன்பு விண்டோஸ் XP தனித்துவமாக வடிவமைக்கும் மென்பொருள் பற்றி எழுதிஇருந்தேன். இந்த மென்பொருள் அதை விட மேம்பட்டது ஆனால் விண்டோஸ் 7 இயங்குதளதிர்க்கானது. இந்த மென்பொருள் உதவியுடன் விண்டோஸ் 7 இயங்கு தளத்தில் வால்பேப்பர்கள், ஐகோன்கள், தீம்கள், டிரைவர்கள், மொழி தொகுப்புகள், அப்டேட்கள் மற்றும் தேவையான மென்பொருள்கள் ஒன்றிணைத்து அல்லது நீக்கி விண்டோஸ் 7 இயங்கு தளத்தை Bootable ISO வாகவோ DVD யாகவோ அல்லது USB யாகவோ உருவாக்க முடியும். இதன் மூலம் விண்டோஸ் 7 32 பிட் மற்றும் 64 பிட் இயங்குதளங்களை உருவாக்க முடியும். மேலும் பல வசதிகளை உள்ளடக்கியது.
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011
உணர்வுகளை மதிப்போம்
என்னுடன் பனி புரியும் அராபிய நண்பர் ஒருவர் சமீபத்தில் தன குடும்பத்துடன் பிரான்சிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடைய பயண அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பொதுவாக சவுதி அரேபிய நண்பர்கள் தங்கள் மதத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவர்கள், மற்றும் ஆச்சாரமானவர்கள். இங்கு அரேபிய பெண்கள் தங்கள் முகங்களையும் உடம்பையும் கருப்பு அங்கியால் மூடியிருப்பார்கள். ( எந்த நாட்டு பெண்களும் சவுதி அரேபியா வந்தால் கண்டிப்பாக கருப்பு அங்கி அணிந்து தான் இருக்க வேண்டும்). இது போல உடை அணிந்து பிரான்சில் வெளியே செல்லும் போது தங்களை இஸ்லாமியர்கள் என்று அறிந்தால் ஏதாவது தொந்தரவு வருமோ என்று அவருக்கு ஒரு பயம் இருந்ததாம். ( உலகம் முழுவதும் ஏதோ அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று மாயையை உருவாக்கி உள்ளார்கள் அல்லவா)
ஒருமுறை அவர் தன குடும்பத்துடன் தொடர் வண்டியில் செல்லும்போது அங்கு இருந்த சிற்றுண்டி சாலையில் அவருக்கு பிடித்தமான Mozzarella Sandwich வாங்கலாம் என்று சென்றாராம். சிற்றுண்டி சாலையில் இருந்த விற்பனையாளரிடம் ஆங்கிலம் தெரியுமா என்ற போது தெரியாது என்றிருக்கிறார். உடனே நம் நண்பர் அவரிடம் செய்கையில் இது வேண்டும் என்று கேட்டார். விற்பனையாளரோ இது வேண்டாம் என்று செய்கையில் காண்பித்திருக்கிறார். நண்பரோ ஏன் நமக்கு தர மாட்டேன் என்கிறார் என்று மீண்டும் இது இரண்டு வேண்டும் என்று செய்கையில் கேட்டார். உடனே அந்த விற்பனையாளர் நண்பரிடம் ஹராம், ஹராம் என்றிருக்கிறார். ஹராம் என்றால் அராபிய மொழியில் பாவம் என்று பொருள். அந்த சான்விச் பன்றி இறைச்சியால் செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவது பாவம். அதனால் தான் அந்த விற்பனையாளர் அவரிடம் தரவில்லை. என் நண்பர் இதை கூறி அந்த விற்பனையாளரின் மற்ற மனிதர்களின் உணர்வை மதிக்கக்கூடிய செய்கையை மிகவும் பாராட்டினார்.
படிக்கும் காலத்தில் என்னுடன் படித்த ஒரு பிராமின நண்பரின் சாப்பாட்டு பாத்திரத்தில் முட்டையை வைத்து விளையாடி அவன் மத்திய உணவை கொட்டி விட்டு பட்டினியாக இருந்ததை நினைத்து பார்த்தேன். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நண்பா நீ எங்கு இருக்குராயோ அன்று செய்த தவறுக்கு மன்னித்து விடு.
நம் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். அப்போது தான் மனிதநேயம் வளரும்.
திங்கள், ஆகஸ்ட் 01, 2011
காணாமல் போன கோப்புகளை சுலபமாக மீட்டெடுக்க
நண்பர்களே சமிபத்தில் என் நண்பர் ஒருவர் தன்னுடைய USB ல் இணைக்கக்குடிய வெளிப்புற வன் தகடு (External USB Hard Disk) ஒன்று வேலை செய்யவில்லை என்றும், அதில் உள்ள முக்கியமான கோப்புகளை மீட்டெடுக்க முடியுமா என்று கேட்டார். மேலும் சில கடைகளில் கோப்புகளை மீட்டெடுக்க நிறைய பணம் கேட்பதாகவும் கூறினர். உடனே நானும் பெரிய தில்லாலங்கடி போல நானே எடுத்து தருகிறேன் என்று கூறி அதை வாங்கி வந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அது அவ்வளவு சுலபம் அல்ல என்று.
செவ்வாய், ஜூலை 19, 2011
வலையில் கோப்புகளை சேமிக்க SKYDRIVE
நண்பர்களே நான் என் நண்பர்களிடம் ஹாட் மெயிலில் உள்ள skydrive என்ற வசதியை பற்றி கூறும்பொழுது நிறைய நண்பர்களுக்கு அது பற்றி தெரியவில்லை. இது போல உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு. ஹாட் மெயிலில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி வழங்கபட்டிருக்கும். இதன் அளவு 25 GB கொள்ளளவு. இது முற்றிலும் இலவசம். இந்த skydrive இல் கடவு சொல் உள்ள பாதுகாக்கப்பட Folder ஆகவும், மற்றும் Favorite , Music , Video என்றும் சேமிக்கலாம். மேலும் இதில் ஷேர் போல்டேராகவும் சேமிக்கலாம். இதில் சேமிக்கப்பட்ட ஒரு ஒரு கோப்பிற்கும் தனிப்பட்ட வலை முகவரி கொடுக்கப் பட்டுள்ளது. ஷேர் போல்டேரில் சேமித்த கோப்புகளை இந்த வலை முகவரியுடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். பாதுகாக்கப்பட்ட கோப்புகளை கடவு சொல் இல்லாமல் பார்க்க முடியாது.
மேலும் இதில் Windows Live Sync என்னும் போல்டெர் ஷேரிங் வசதி ஓன்று உள்ளது. இது ஒரு கணணி மென்பொருள் மற்றும் வலையுடன் இயங்கக் கூடிய ஒரு வசதி. உங்கள் கணணியிலும் மற்றும் கோப்புகளை பகிரவேண்டிய கணணியிலும் இந்த Windows Live mesh என்ற மென்பொருளை நிறுவ வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் கணனியில் உள்ள கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் கொள்ளளவு 5 GB . இதில் 20000 கோப்புகளையும் 20 போல்டேர்களையும் சேமிக்கலாம்.
ஹாட் மெயிலில் உள்ள skydrive படம்

திங்கள், ஜூலை 11, 2011
உபயோகமான சில குறுக்கு வழிகள்
சனி, ஜூலை 02, 2011
nLite - Windows XP Deployment Tool
இப்பொழுதும் விண்டோஸ் XP அனேக பயனாளர்கள் உபயோகிக்கும் இயங்கு தளமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது சந்தைக்கு வரும் புதிய மடிக்கணணி மற்றும் நோட் புக் கணணிகளிலும் sata வன்தட்டுகள் உபயோகப் படுத்தப் படுகின்றன . இதற்கு இதன் வேகமும் ஒரு காரணம். sata வன்தட்டுகள் உள்ள இப்படிப்பட்ட கணனிகளில் விண்டோஸ் XP நிறுவும் போது வன்தட்டு இல்லை என்று காண்பிக்கும். இதற்கு காரணம் விண்டோஸ் XP யில் SATA வன்தட்டுக்கான டிரைவர் இணைக்கப்படவில்லை. கணனியில் ப்ளோப்பி டிரைவ் இருந்தால் SATA வன்தகடின் டிரைவரை தரவிறக்கி நிறுவலாம். ஆனால் இந்த கணனிகளில் ப்ளோப்பி டிரைவ் இருக்காது. இந்த குறையை சரி செய்ய இந்த nLite மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி. மற்றும் வேறு சுட்டி
இதை தரவிறக்கி நிறுவிய பிறகு கீழ்கண்ட சாளரங்கள் வரும். முதலில் ஒரு அசல் விண்டோஸ் XP குறுந்தகடை டிரைவில் இட்டு பிறகு இறுதி தயாரிபிற்கான போல்டேரையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கி வைத்துள்ள SATA வன்தகடின் டிரைவரை மற்றும் சர்வீஸ் பேக் இணைத்துக்கொள்ளலாம். இறுதியில் ISO கோப்பாக உருவாகிக் கொள்ளலாம். பிறகு ISO கோப்பை Nero, PowerIso அல்லது Ultra ISO போன்ற மென்பொருளை உபயோகித்து குறுந்தகடாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் தரவிறக்க சுட்டி. மற்றும் வேறு சுட்டி
திங்கள், ஜூன் 27, 2011
இனைய இயங்குதளம் (Web OS)

தற்பொழுது கூகுள் நிறுவனம் புதிய மடிக் கணணியை இனைய இயங்குத்தளத்தை Google Chromium என்று அறிமுகப் படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்பொழுதும் சில இயங்குதளங்கள் உள்ளது. உதாரணமாக iCloud இது Apple நிறுவனத்தின் மடிக்கணணி, iPad மற்றும் கைபேசியிலும் இருந்து தொடர்புகொள்ள முடியும். ஆனால் நான் குறுப்பிட இருப்பது ஒரு இலவச இனைய இயங்கு தளம்.
இந்த இயங்கு தளத்தின் சிறப்பம்சங்கள்
- இது எல்லாவிதமான இயங்குதளம் மற்றும் உலவிகளிலும் இருந்து பயன்படுத்த முடியும். உதாரனத்திற்க்கு Windows, Linux மற்றும் Mac இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும்.
- மேலும் Android, Black Berry,iPhone, iPad, செம்பியன் மற்றும் Windows மொபைல்களிலும் இருந்து பயன் படுத்த முடியும்.
- இதில் இலவச மின்னஞ்சல் மற்றும் 30 GB இலவச சேமிப்பு இடமும் தரப்பட்டுள்ளது.
- இதில் போட்டோ எடிட் மற்றும் டாகுமென்ட் எடிட் பண்ணமுடியும்.
- மற்றும் பல வசதிகள்.
நான் இதை உபயோகித்துபார்த்தேன் நன்றாக இருக்கிறது.
கணனியில் இருந்து தொடர்பு கொள்ள இங்கு
iPad ல் இருந்து த்தொடர்பு கொள்ள இங்கு
கைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள இங்கு
அருகில் இருபவர்களை நேசியுங்கள்
இது சமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தி
60 வயது பாட்டியை காதலித்து அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்
தர்மபுரி: 60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார் .
இப்பொழுது அனேக இளைஞர்களும் மேலும் சில பெரியவர்களும் தங்கள் நேரங்களை Facebook,Twitter மற்றும் அநேக அரட்டை அறைகளிலும் செலவிடுகிறார்கள். என் நண்பர் ஒருவர் விடுதியில் இருக்கும் தன் மகனுக்கு வந்திருக்கும் காய்ச்சலைப் பற்றி Facebook ல் பார்த்து தெரிந்துகொண்டார் என்று அவரே கூறினார். மேல் நாடுகளில் நேரமின்மையால் கற்பனையான வளர்ப்பு பிராணிகள் மற்றும் காதலிகள் என்று மென்பொருள்களும் விளையாட்டு பொருள்களும் வைத்திருகிறார்கள். அதுபோல ஒரு செயல்தான் இதுவும். நமக்கு நேரமில்லை என்று சொல்வது உண்மையல்ல, இது சோம்பலின் மறுபெயர். நம்முடைய வேலைநேரம் அதே 8 மணிநேரம்தான். மீதம்முள்ள நேரத்தை பொழுது போக்குவதற்கும் இணையத்திலும் செலவிடுகிறோமே ஒழிய அதை நம்முடன் இருக்கும் துணைகளுடனும், பெற்றோர்களுடனும் குழந்தைகளுடனும் செலவிட மறுக்கிறோம். எங்கோ தூரத்தில் இருக்கும் முகம் தெரியாத ஒருவருடன் செலவிடத் தயாராக இருக்கும் நாம் நம்முடனே கூட இருக்கும் நமக்காக இருக்கும் நம் உறவுகள் நேசிப்பதும் இல்லை மதிப்பதும் இல்லை. அதனால் தன் மேலே குருப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. நேசிப்போம் மனிதர்களாய் வாழ்வோம்.

வெள்ளி, ஜூன் 17, 2011
வின்க்- கணணி திரை கைப்பற்றும் மென் பொருள்
இது ஒரு ஸ்க்ரீன் காப்சுரிங் மென்பொருள், அதாவது கணனியின் திரையில் உள்ள பிரேம்களை சிறு சிறு புகைப்படங்களாக மாற்றி பின்பு அதை பிளாஷ் திரைப்படமாக உருவாக்க கூடிய சிறிய மென் பொருள். இதன் அளவு 3.19 எம்.பி. இந்த பிளாஷ் திரைபடங்கள் மென்பொருள்கள் கற்பிப்பதற்கும் மென்பொருள்கள் விளக்கப்படங்கள் தயாரிபதற்கும் உபயோகமாக இருக்கும்.
இது ஒரு இலவச மென்பொருள்
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களிலும் இயங்குமாறு பலவித வடிவங்களில் உள்ளது.
இதனுடன் ஒலி தகவல்களையும் இணைக்கலாம்.
இதனுடன் பலவகையான உள்ளீடுகளையும் இணைக்கலாம். இதன் தரவிறக்க சுட்டி
இதன் மூலம் தயாரித்த காணொளி

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)