நண்பர்களே நான் என் நண்பர்களிடம் ஹாட் மெயிலில் உள்ள skydrive என்ற வசதியை பற்றி கூறும்பொழுது நிறைய நண்பர்களுக்கு அது பற்றி தெரியவில்லை. இது போல உள்ள நண்பர்களுக்காக இந்த பதிவு. ஹாட் மெயிலில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த வசதி வழங்கபட்டிருக்கும். இதன் அளவு 25 GB கொள்ளளவு. இது முற்றிலும் இலவசம். இந்த skydrive இல் கடவு சொல் உள்ள பாதுகாக்கப்பட Folder ஆகவும், மற்றும் Favorite , Music , Video என்றும் சேமிக்கலாம். மேலும் இதில் ஷேர் போல்டேராகவும் சேமிக்கலாம். இதில் சேமிக்கப்பட்ட ஒரு ஒரு கோப்பிற்கும் தனிப்பட்ட வலை முகவரி கொடுக்கப் பட்டுள்ளது. ஷேர் போல்டேரில் சேமித்த கோப்புகளை இந்த வலை முகவரியுடன் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். பாதுகாக்கப்பட்ட கோப்புகளை கடவு சொல் இல்லாமல் பார்க்க முடியாது.
மேலும் இதில் Windows Live Sync என்னும் போல்டெர் ஷேரிங் வசதி ஓன்று உள்ளது. இது ஒரு கணணி மென்பொருள் மற்றும் வலையுடன் இயங்கக் கூடிய ஒரு வசதி. உங்கள் கணணியிலும் மற்றும் கோப்புகளை பகிரவேண்டிய கணணியிலும் இந்த Windows Live mesh என்ற மென்பொருளை நிறுவ வேண்டும். இப்பொழுது நீங்கள் உங்கள் கணனியில் உள்ள கோப்புகளை எங்கிருந்து வேண்டுமானாலும் தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் கொள்ளளவு 5 GB . இதில் 20000 கோப்புகளையும் 20 போல்டேர்களையும் சேமிக்கலாம்.
ஹாட் மெயிலில் உள்ள skydrive படம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக