நண்பர்களே சமிபத்தில் என் நண்பர் ஒருவர் தன்னுடைய USB ல் இணைக்கக்குடிய வெளிப்புற வன் தகடு (External USB Hard Disk) ஒன்று வேலை செய்யவில்லை என்றும், அதில் உள்ள முக்கியமான கோப்புகளை மீட்டெடுக்க முடியுமா என்று கேட்டார். மேலும் சில கடைகளில் கோப்புகளை மீட்டெடுக்க நிறைய பணம் கேட்பதாகவும் கூறினர். உடனே நானும் பெரிய தில்லாலங்கடி போல நானே எடுத்து தருகிறேன் என்று கூறி அதை வாங்கி வந்துவிட்டேன். பிறகுதான் தெரிந்தது அது அவ்வளவு சுலபம் அல்ல என்று.
என்னிடம் உள்ள தரவு மீட்சி மென்பொருள்கள் (Data Recovery Software) அனைத்தையும் உபயோகித்து முயற்சி செய்து பார்த்தேன் . நேரம் தான் விணானது என்னால் 5% தரவுகள் (data) மட்டும் தான் மீட்க முடிந்தது.
பிறகு நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் Windows மற்றும் Linux இயங்கு தளங்களில் உள்ள நிறை குறைகள் பற்றி கூறினார். அப்போது Windows இயங்குதளங்களில் சிலசமயங்களில் USB ல் இணைக்கக்கூடிய வெளிப்புற வன் தகடு (External Hard Drive) மற்றும் Flash Drive களில் உள்ள கோப்புகளை காண்பிக்காது என்றும் லினெக்ஸ் இயங்குதளங்கள் அவைகளை காண்பிக்கும் என்றார் .
உடனே நான் இணையதளத்தில் இருந்து உபண்டு லினெக்ஸ் ஐ தரவிறக்கி சிடியில் பதித்துக்கொண்டேன். பிறகு கணணியை அந்த சிடி கொண்டு துவங்கினேன் . உபண்டு லினக்ஸ்ஸில் சிடி கொண்டு துவங்கும் போது இயங்குதளத்தை நிறுவ வேண்டுமா அல்லது முயற்சி செய்ய வேண்டுமா என்று கேட்க்கும். உங்களுக்கு நிறுவ விருப்பம் இல்லை என்றால் முயற்சி செய்கிறேன் என்று தேர்ந்தெடுங்கள். இப்போது கணணி இயங்கு நிலைக்கு வந்த பிறகு வெளிப்புற வன் தகடை இணைத்து பிறகு my computer இல் திறந்து பாருங்கள். உங்கள் கோப்புகள் அனைத்தையும் காண முடியும் இப்போது உங்கள் கோப்புகளை நகல் எடுத்து சேமியுங்கள். நான் பிழையான வன் தட்டில் இருந்து 75% கோப்புகளை மீட்டெடுத்தேன்.

முயற்சி செய்து பாருங்கள்
Useful information. Thank you.
பதிலளிநீக்கு